- வெள்ளை ரவை - கால் கிலோ
- கேரட் - 2
- பீன்ஸ் - 10
- பட்டாணி - 50 கிராம்
- பச்சைமிளகாய் - 4
- பெரிய வெங்காயம் - 2
- இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
- உப்பு
- கறிவேப்பிலை, மல்லி தழை
- சர்க்கரை - 2 தேக்கரண்டி
- தாளிக்க:
- ஏலக்காய் - 2
- கிராம்பு - 3
- பட்டை - சிறு துண்டு
- பிரிஞ்சி இலை - 1
- சோம்பு - ஒரு தேக்கரண்டி
- எண்ணெய் + நெய் - 100 மி.லி
- ரவையை வெறும் கடாயில் வறுக்கவும். காய்களை பொடியாக நறுக்கி வைக்கவும். தாளிக்க கூறியுள்ள பொருட்களை லேசாக தட்டி வைக்கவும்
- கடாயில் எண்ணெய், நெய் விட்டு தாளிக்கும் பொருட்களை போட்டு தாளிக்கவும்.
- பின்னர் காய்கறி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் ரவையின் அளவிற்கு மூன்று பங்கு தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள், சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.
- கொதித்ததும் ரவையை சேர்த்து கிளறி அடுப்பை சிம்மில் வைத்து மூடி வைக்கவும். அடிக்கடி கிளறி விடவும். வெந்ததும் மல்லித்தழை வறுத்த முந்திரி தூவி அலங்கரிக்கவும். தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்
Monday, October 1, 2012
வெஜிடபிள் கிச்சடி
ஓட்ஸ் ரவா தோசை
- ஓட்ஸ்- ஒரு கப்
- அரிசி மாவு- கால் கப்
- ரவை- அரை கப்
- தயிர்- 1 கப்
- தண்ணீர்- தேவைக்கு
- உப்பு- தேவைக்கு
- எண்ணெய் அல்லது வெண்ணெய்- சிறிதளவு
- ஓட்ஸ் மற்றும் ரவையை குறைந்தது 15 முதல் இருபது நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும்
- ஊறிய ஓட்ஸ் மற்றும் ரவையை தேவையான அளவு உப்பு இட்டு கையாலேயே பிசைந்துக்கொள்ளவும்.
- அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும். அத்துடன் தயிரையும் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கொண்டுவரவும்.
- அரை மணி நேரம் கழித்து தோசைக் கல்லை மிதமான சூட்டில் வைத்து இந்த மாவை தோசைக்கு ஊற்றுவது போல் நடுவில் ஊற்றாமல் தோசைக் கல்லை சுற்றி ஊத்தி நடுவில் கொண்டு வர வேண்டும்.
- மாவும் கொஞ்சம் தண்ணீர் போல் தான் இருக்கும். அதனால் தானாக நடுவில் வந்து கூடிவிடும்.
- எண்ணெய் விட்டு பின் திருப்பி போட்டு எடுக்கவும்.
- மொறு மொறு ஓட்ஸ் தோசை ரெடி.
ஈசி ப்ரெட் உப்புமா
- ப்ரெட் பொடித்தது - 2கப்
- வெங்காயம் - 1
- உப்பு- தேவையான அளவு
- தாளிக்க:
- எண்ணெய்- 1மேசைக்கரண்டி
- மிளகாய் வற்றல் - 3 அல்லது 4
- கறிவேப்பிலை - 1 இனுக்கு
- கடுகு- 1/2 தேக்கரண்டி
- உளுந்து- 1மேசைக்கரண்டி
- ப்ரெட் ஸ்லைஸ்களை மிக்சியில் இட்டு பொடியாக்கவும்.
- வாணலியில் எண்ணெய் சூடாக்கி தாளிக்க கொடுத்தவற்றை போட்டு தாளித்து வெங்காயம் உப்பு சேர்த்து 2நிமிடம் வதக்கவும்.
- பொடித்த ப்ரெட் சேர்த்து மேலும் 1நிமிடம் கிளறி இறக்கவும்.
- சுவையான ப்ரெட் உப்புமா தயார்,
- Note:
- உப்பு வெங்காயத்திற்கு தேவையான அளவு மட்டும் சேர்த்தால் போதுமானது. தேங்காய் துருவல், வறுத்த வேர்க்கடலையும், முந்திரி பருப்பு சேர்த்தும் சுவையை அதிகரிக்கலாம்.
Subscribe to:
Comments (Atom)