Tuesday, April 13, 2010

புதினா துவையல்

தேவையானப் பொருட்கள்

  • புதினா - ஒரு கட்டு
  • தேங்காய் - அரை மூடி
  • மிளகாய் வற்றல் - 12
  • புளி - சிறு நெல்லிக்காய் அளவு
  • உப்பு - ஒரு தேக்கரண்டி
  • உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
  • பெருங்காயத் தூள் - அரை தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து
  • கடுகு - அரை தேக்கரண்டி
  • எண்ணெய் - ஒன்றரை மேசைக்கரண்டி
புதினா இலைகளை ஆய்ந்து கொண்டு தண்ணீரில் அலசிக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். மிளகாய் வற்றலை இரண்டாக கிள்ளி எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு போட்டு 30 நொடி சிவக்க வறுக்கவும்.
 
பருப்பு சிவந்ததும் கிள்ளி வைத்திருக்கும் மிளகாய் வற்றல் மற்றும் புளி போட்டு ஒரு நிமிடம் வறுக்கவும்
ஒரு நிமிடம் கழித்து அலசி வைத்திருக்கும் புதினாவை போட்டு 2 நிமிடம் வதக்கவும். புதினா இலை லேசாக நிறம் மாறியதும் அடுப்பில் இருந்து எடுத்து ஆற விடவும்
 
வாணலியில் அரை மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

பிறகு மிக்ஸியில் வதக்கிய பொருட்களுடன் உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைக்கவும். அதன் பின்னர் அரைத்த துவையலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். பிறகு அதில் தாளித்த பொருட்களை கொட்டி கலந்துக் கொள்ளவும். 

இந்த துவையலை சாதத்துடன் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இட்லி மற்றும் தோசைக்கு கூட சேர்த்து சாப்பிடலாம்.

 
 
 

கத்தரிக்காய் துவையல்

தேவையான பொருட்கள்

  • கத்தரிக்காய் 4
  • உளுத்தம் பருப்பு 2 தேக்கரண்டி
  • காய்ந்த மிளகாய் 6
  • உப்பு தேவையான அளவு
  • பெருங்காயம் சிறிதளவு
  • புளி - சுண்டைக்காய் அளவு
  • எண்ணெய் - 8 டீ ஸ்பூன்

செய்முறை

  • கத்தரிக்காயை நறுக்கிக் கொண்டு 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு வதக்கி தனியே வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பை பொன்னிறமாகும் வரை வறுக்கவும். அடுத்து பெருங்காயத்தை நன்கு பொரித்துக் கொண்டு, அடுப்பை அணைத்துவிட்டு, அந்த வாணலியின் சூட்டிலேயே காய்ந்த மிளகாயைப் போட்டு வறுக்கவும்.
  • சூடு ஆறிய பின் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு சுண்டைக்காய் அளவு புளி மற்றும் உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். நீர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை.
  • இதை சாதத்திற்குப் பிசைந்து சாப்பிடவும், தயிர் சாதம், மற்றும் தோசை இட்லி என அனைத்திற்கும் தொட்டுக் கொள்ள மிக அருமையாக இருக்கும்

கொத்தமல்லி இனிப்பு துவையல்

தேவையான பொருட்கள்

  • கொத்தமல்லி தழை -ஒரு கைபிடி
  • மிளகாய் வத்தல் - 5
  • புளி - நெல்லிக்காய் அளவு
  • வெல்லம் - 50கிராம்
  • உப்பு -தேவையான அளவு
  • எண்ணெய் - 2ஸ்பூன்

செய்முறை

  • அடுப்பில் வாணலியை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் புளி,வத்தலை போட்டு நன்றாக வறுத்து தனியாக எடுத்து கொள்ளவேண்டும்.
  • அதே எண்ணெயில் நன்றாக கழுவி நறுக்கிய கொத்தமல்லித்தழையை போட்டு வதக்கி எடுத்து கொள்ளவேண்டும்.
  • பின்பு அனைத்தையும் மிக்ஸியில் போட்டு சிறிது உப்பு சேர்த்து இரண்டு சுற்று சுற்றவிட்டு பின் 50கிராம் வெல்லத்தை அதனுடன் சேர்த்து நைசாக அரைத்து எடுக்க வேண்டும்.
  • இதை இட்லி,தோசைக்கு பரிமாறலாம்.

கார சட்னி

தேவையான பொருட்கள்

  • 1. வெங்காயம் - 1
  • 2. தக்காளி - 1
  • 3. கொத்தமல்லி இலை - 1/4 கப்
  • 4. உப்பு - தேவைக்கு
  • 5. மிளகாய் வற்றல் - 2
  • 6. தேங்காய் துருவல் - 1 மேஜைக்கரண்டி

செய்முறை

  • வெங்காயம், தக்காளி சிறிதாக நறுக்கவும்.
  • கடாயில் எண்ணெய் 2 தேக்கரண்டி விட்டு காய்ந்ததும் மிளகாய் வற்றல், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து எடுக்கவும்.
  • இத்துடன் கொத்தமல்லி, உப்பு, தேவைக்கு தண்ணீர் விட்டு நன்றாக அரைக்கவும்.

குறிப்பு:

இட்லி, தோசைக்கு மிகவும் நன்றாக இருக்கும்.

கொத்தமல்லி சட்னி

தேவையான பொருட்கள்

  • கொத்தமல்லிகீரை -1கட்டு
  • சின்னவெங்காயம் -10
  • தனியா -1ஸ்பூன்
  • சீரகம் -1/4ஸ்பூன்
  • காய்ந்தமிளகாய் -1
  • பூண்டு -2பல்
  • இஞ்சி -1சிறுதுண்டு
  • தேங்காய் துறுவல் -1/4கப்
  • பொட்டுகடலை -1ஸ்பூன்
  • புளி -சிறிது
  • உப்பு -தேவையான அளவு
  • எண்ணை -1ஸ்பூன்

செய்முறை

  • கொத்தமல்லிகீரையை சுத்தம்செய்து அலசி வைக்கவும்.
  • வெங்காயம்,பூண்டு தோல் உரித்துவைக்கவும்.
  • இஞ்சியை சுத்தம் செய்து வைக்கவும்.
  • வாணலியில் எண்ணை ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கி தனியா,சீரகம்,பூண்டு,இஞ்சி,காய்ந்தமிளகாய் போட்டு நன்குவதக்கவும்.
  • கொத்தமல்லி கீரை போட்டு நன்கு சுருள வதக்கவும்.தேங்காய் துறுவல்,பொட்டுகடலை,புளி,உப்பு போட்டு வதக்கி ஆறவைக்கவும்.
  • ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
  • சுவையான கொத்தமல்லி சட்னி ரெடி.

குறிப்பு:

சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.இட்லி,தோசைக்கும் நன்றாக இருக்கும்.காரம் வேண்டுமென்றால் மிளகாய் அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம்

அவசர தக்காளி சட்னி

தேவையான பொருட்கள்

  • தக்காளி - விழுது(1 கப்)மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
  • எண்ணெய் - 4 தேக்கரண்டி
  • உப்பு - சிறிது
  • மிளகாய் தூள் - தேவையான அளவு
  • மஞ்சள் தூள் - சிறிது
  • கடுகு - சிறிது
  • பெருங்காயம் - சிறிது
  • கறிவேப்பிலை - சிறிது

செய்முறை

  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,பெருங்காயம்,தக்காளி விழுது,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,உப்பு ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும். கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

குறிப்பு:

இட்லி,தயிர் சாதம் போன்ற வற்றிற்க்கு தொட்டு கொள்ள ஏற்றது.

புதினா சட்னி

தேவையான பொருட்கள்

  • புதினா - 1 கட்டு
  • தக்காளி - 1
  • பச்சை மிளகாய் - 5
  • உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
  • எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • புதினாவை நன்கு சுத்தம் செய்து வைக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
  • எண்ணெய் சூடானதும் உளுத்தம் பருப்பு போட்டு நன்கு சிவக்க வறுக்கவும். பிறகு பச்சை மிளகாயை வதக்கவும்.
  • புதினா இலையை சிரதளவுக்கு கூட தண்ணீர் இல்லாமல் தனியாக வதக்கவும்.
  • அதன் பின்னர் தக்காளியை தனியாக வதக்கவும்.
  • எல்லாம் ஆறியபின் பருப்பு, மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் இல்லாமல் அரைக்கவும். அதன் பின் புதினா சேர்த்து அரைக்கவும். கடைசியாக தக்காளி சேர்த்து அரைக்கவும்.

குறிப்பு:

புளிக்கு பதிலாக தக்காளி செற்பதால் சுவையும் கூடும் பார்பதற்கு நன்கு பச்சை கலராக இருக்கும்

முள்ளங்கி சட்னி

தேவையான பொருட்கள்

  • முள்ளங்கி - 1 கப்
  • எண்ணெய் - சிறிது
  • கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
  • உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
  • வெங்காயம் - 1
  • தக்காளி - 3
  • புளி - சிறிதளவு
  • உப்பு - தேவைக்கேற்ப
  • பச்சை மிளகாய் - 8
  • தேங்காய் துறுவல் - 3 தேக்கரண்டி
  • கருவேப்பிலை - சிறிது
  • கடுகு - சிறிது

செய்முறை

  • கடாயில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு,உளுத்தம் பருப்பு,வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் தக்காளி,புளி,உப்பு,பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் முள்ளங்கி சேர்த்து நன்கு வதக்கி தண்ணீர் தெளித்து விட்டு மிதமான தீயில் மூடி வைத்து வேக வைக்கவும்.
  • பின் தேங்காய் துறுவல்,கருவேப்பிலை சேர்த்து வதக்கி ஆரிய பின் மிக்ஸியில் அரைக்கவும்.
  • பின் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,கருவேப்பிலை தாளித்து சட்னியுடன் சேர்க்கவும்.

குறிப்பு:

சாதத்தில் நல்லெண்ணெயுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

தக்காளி வெங்காய சட்னி:

தேவையான பொருட்கள்

  • சின்ன வெங்காயங்கள்- ஒரு கை
  • தக்காளி[பொடியாக அரிந்தது]- 2 கப்
  • உளுத்தம்பருப்பு- 1 ஸ்பூன்
  • கடலைப்பருப்பு- 1 ஸ்பூன்
  • வற்றல் மிளகாய்-7
  • புளி- ஒரு நெல்லிக்காயளவு
  • கொத்தமல்லி இலை-அரை கப்
  • தேங்காய்த்துருவல்- கால் கப்
  • பூண்டிதழ்கள்-5
  • தேவையான உப்பு
  • தேவையான நல்லெண்ணெய்

செய்முறை

  • புளியை சிறிது நீரில் ஊறவைக்கவும்.
  • 4 ஸ்பூன் எண்ணெயை ஒரு வாணலியில் ஊற்றி சுடவைக்கவும்.
  • முதலில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வற்றல் மிலகாய் இவற்றை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
  • அதே எண்ணெயில் வெங்காயம், பூண்டு, தக்காளி இவற்றை குழைவாக வதக்கவும். அனனத்துப்பொருள்களுடனும் தேங்காய், கொத்தமல்லி, உப்பு, புளி சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்

பொட்டட்டோ புலாவ்

தேவையான பொருட்கள்

  • உருளைக்கிழங்கு - 1 பெரியது
  • பாசுமதி அரிசி - 300 கிராம்
  • எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
  • பட்டை - 1 துண்டு
  • பிரியாணி இலை - 1
  • ஏலம் -2
  • கிராம்பு - 2(விருப்பப்பட்டால்)
  • சோம்பு - கால்ஸ்பூன்(விருப்பப்பட்டால்)
  • வெங்காயம் - 1
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
  • உப்பு - தேவைக்கு
  • தண்ணீர் - அரை லிட்டர்
  • மல்லி இலை - கொஞ்சம் அலங்கரிக்க.

செய்முறை

  • அரிசி கழைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.வெங்காயம்,உருளை தோல் நீக்கி மெல்லிய துண்டுகளாய் கட் செய்யவும்.மல்லி இலை பொடியாக கட் செய்யவும்.
  • அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,பட்டை,பிரியாணி இலை,சோம்பு,ஏலம்,கிராம்பு,வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  • பின்பு இஞ்சி பூண்டு,மஞ்சல்,உப்பு,உருளை சேர்த்து வதக்கி அளவுத்தண்ணீர் சேர்த்து அரிசி போட்டு மூடி விடவும்.
  • நன்றாக கொதிவந்ததும் சிம்மில் வைத்து 15-20 நிமிடம் வைக்கவும்.
  • வெந்த பின்பு 5-10 நிமிடம் கழித்து திறந்து மல்லி இலை தூவி பரிமாறவும்.
  • சுவையான காஷ்மீரி பொட்டட்டோ புலாவ் ரெடி.

ராயல் தேங்காய் சாதம்

தேவையான பொருட்கள்

  • சாதம் – 2 கப்
  • தேங்காய் – ½ முடி
  • சின்ன வெங்காயம் - 4
  • பச்சை மிளகாய் – 3
  • இஞ்சி – ஒரு சிறிய துண்டு
  • உளுத்தம் பருப்பு – 1 தே.கரண்டி
  • கடலை பருப்பு – ½ தே.கரண்டி
  • கருவேப்பில்லை – 4 இலை
  • உப்பு – 1 தே.கரண்டி
  • தேங்காய் எண்ணெய் – 2 தே.கரண்டி
  • முந்திரி – 10

செய்முறை

  • முதலில் வெங்காயத்தினை வெட்டி கொள்ளவும். பச்சை மிளகாயினை இரண்டாக கீறி வைக்கவும்.
  • தேங்காயினை துறுவி கொள்ளவும்.
  • ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து பின் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் முந்திரி சேர்த்து வறுக்கவும்.
  • அதன் பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
  • நன்றாக வதங்கிய பிறகு உப்பு ,இஞ்சி சேர்த்து துறுவி வைத்துள்ள தேங்காயினையும் சேர்த்து 2 – 3 நிமிடம் வதக்கவும்.
  • கடைசியில் சாதத்துடன் சேர்த்து நன்றாக கிளறவும்.
  • இப்பொழுது சுவையான தேங்காய் சாதம் ரெடி.

கீரை சாதம் (குழந்தைகளுக்கு)

தேவையான பொருட்கள்

  • 1. அரிசி - 1/2 கப்
  • 2. ஸ்பினாச் - 1/2 கட்டு
  • 3. வெங்காயம் - 1/2
  • 4. பூண்டு - 5 பல்
  • 5. இஞ்சி
  • 6. கரம் மசாலா தூள் - 1/4 - 1/2 தேக்கரண்டி
  • 7. மிளகாய் வற்றல் - 2
  • 8. மல்லி தூள் - 1 தேக்கரண்டி
  • 9. உப்பு

செய்முறை

  • ஸ்பினாச் பொடியாக நறுக்கி தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
  • குழைய வரவில்லை என்றால் ப்லென்டரில் லேசாக அடித்து வைக்கவும். (கீரை வேக வைத்த தண்ணீரிலேயே செய்யவும்)
  • அரிசியை 3/4 கப் தண்ணீர் ஊற்றி 3/4 பங்கு வேக வைக்கவும்.
  • வெங்காயம், பூண்டு, மிளகாய் வற்றல் மூன்றையும் ப்லென்டரில் போட்டு அடிக்கவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காய மசாலா, கரம் மசாலா, மல்லி தூள் சேர்த்து நன்றாக பச்சை வாசம் போக வதக்கவும்.
  • இதை கீரையில் சேர்த்து, உப்பு போட்டு ஒரு கொதி விடவும்.
  • பின் 3/4 வெந்த சாதம் சேர்த்து மூடி நன்றாக சாதம் வேக வைத்து எடுக்கவும்.

குறிப்பு:

இது சத்தானது. கூடவே வெங்காயம் பூண்டு அரைத்து சேர்ப்பதால் குழந்தைகள் எடுத்து விட மாட்டார்கள். கீரை சேர்த்து சாதம் வேக வைப்பதால் ருசியாக இருக்கும். விரும்பினால் இதில் பொடியாக நறுக்கிய கேரட் கூட சேர்க்கலாம்

ஈஸி சாம்பார் ரைஸ்

தேவையான பொருட்கள்

  • பச்சரிசி – 2 கப்
  • துவரம் பருப்பு – 1 கப்
  • வெங்காயம் – 1
  • தக்காளி – 1
  • கருவேப்பில்லை – 4 இலை
  • குடைமிளகாய் – 1
  • காரட் – 100 கிராம்
  • முள்ளங்கி – 100 கிராம்
  • நெய் – 1 மேஜை கரண்டி
  • எண்ணெய் – 2 தே.கரண்டி
  • சாம்பார் பொடி – 2 தே.கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
  • -----------------------
  • தாளிக்க:
  • -----------------------
  • கடுகு – 1/2 தே.கரண்டி
  • காய்ந்த மிளகாய் – 2

செய்முறை

  • முதலில் வெங்காயம் , தக்காளி அரிந்து கொள்ளவும். காய்களை ஓரே அளவாக வெட்டி கொள்ளவும்.
  • புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.
  • பிரஸர் குக்க்ரில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும்.
  • பின் அதில் வெங்காயம் மற்றும் கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
  • அதன் பின் ஒரே அளவில் வெட்டி வைத்துள்ள காய்களை போட்டு வதக்கவும்.
  • அதன் பின் அரிசி , துவரம் பருப்பு,கரைத்து வைத்துள்ள புளி,தக்காளி , சாம்பார் பொடி ,உப்பு மற்றும் 4 கப் தண்ணீருடன் சேர்த்து நன்றாக கிளறி 2 -3 விசில் வரும் வரை வேகவிடவும்.
  • கடைசியில் பிரஸர் அடங்கியதும் நெய் சேர்த்து சுடாக பரிமாறவும்.
  • இப்பொழுது சுவையான ஈஸி சாம்பார் ரைஸ் ரெடி. இத்துடன் அப்பளம் அல்லது வறுவலுடன் சாப்பிட சுவையாக இருக்கும்

கொத்தமல்லி சாதம்

தேவையான பொருட்கள்

  • சீரகம் -- 1 1/2 டீஸ்பூன்
  • சின்ன வெங்காயம் -- 1 1/2 கப் (நீளமாக நறுக்கியது)
  • நெய் -- 1/2 கப்
  • முந்திரி பருப்பு -- 25 என்னம் (பாதியாக உடைத்துக்கொள்ளவும்)
  • அரிசி -- 1 1/2 கப்
  • அரைக்க :
  • கொத்தமல்லி தழை -- 1 கட்டு
  • பூண்டு -- 5 என்னம்
  • உப்பு -- ருசிக்கேற்ப
  • பச்சை மிளகாய் -- காரத்திற்கேற்ப

செய்முறை

  • அரிசியை முதலில் சாதமாக வடித்து ஆறவைத்துக் கொள்ளவும்.
  • அடி கனமான பாத்திரத்தில் பாதி நெய்யை ஊற்றி சீரகத்தை தாளித்து பின் வெங்காயத்தை போட்டு நன்றாக சிவக்கும் வரை வறுக்கவும்.
  • அரைக்க கொடுத்தவற்றை அரைக்கவும்.
  • அரைத்த மசாலாவை வாணலியில் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • நெய் அப்படியே மேலே வரும்...
  • இதனிடையே மீதி உள்ள நெய்யில் எல்லா முந்திரிகளையும் வறுக்கவும்.
  • வறுத்தவைகளில் பாதியை சாதத்துடன் கலந்து வைக்கவும்.
  • இதனை மசாலாவுடன் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
  • பின் மீதி உள்ள முந்திரியை மேலே தூவி பறிமாறவும்.\
  • ரிச்சான கொத்தமல்லி சாதம் ரெடி.

இட்லி பொடி சாதம்

தேவையான பொருட்கள்

  • சாதம் – 1 கப்
  • இட்லி பொடி – 2 மேஜை கரண்டி
  • ---------------------------------
  • தாளிக்க:
  • ---------------------------------
  • நல்லெண்ணெய் – 2 தே.கரண்டி
  • கடுகு – தாளிக்க
  • கடலை பருப்பு – 1 தே.கரண்டி
  • கருவேப்பில்லை – 4 இலை

செய்முறை

  • முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பின் கடலை பருப்பு சேர்த்து வறுத்து கடைசியில் கருவேப்பில்லை போட்டு தாளிக்கவும்.
  • தாளித்த பொருட்களை சாதம் மற்றும் இட்லி பொடியுடன் சேர்த்து கிளறவும்.
  • இப்பொழுது சுவையான இட்லி பொடி சாதம் ரெடி.

கிரீன் ரைஸ்

தேவையான பொருட்கள்

  • கீரை - ஒரு கட்டு
  • கொத்தமல்லி - இரண்டு கைப்புடி
  • புதினா - ஒரு கைப்புடி(தேவைப்பட்டால்)
  • பீன்ஸ் - ஒரு கப்
  • பச்சை பட்டாணி - அரை கப்(தேவைப்பட்டால்)
  • பெருங்காயம் - இரண்டு பின்ச்
  • மிளகாய் வற்றல் - மூன்று
  • சாதம் - ஒன்றரை கப் (அல்லது)இரண்டு கப்
  • தாளிப்பதற்கு:
  • கடுகு
  • கடலை பருப்பு
  • உளுத்தம்பருப்பு
  • நிலக்கடலை
  • கறிவேப்பிலை
  • முந்திரி

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு கொத்தமல்லி,கீரை,புதினா ,உப்பு போட்டு நன்கு வேக விடனும்.
  • *அடுப்பில் இனொரு பாத்திரத்தில் பீன்ஸ் மற்றும் பச்சை பட்டாணியை வேக விடனும்.
  • *கீரை கலவை மற்றும் பீன்ஸ் கலவை வெந்ததும் கீரை கலவையை மிக்சரில் போட்டு நீர் விடாமல் அரிது எடுக்கவும்.
  • *ஒரு கடையில் சிறிது ஆயில் விட்டு தாளிக்க வேண்டியவற்றை தாளித்து பெருங்காயம்,பீன்ஸ் மற்றும் பட்டாணி போட்டு வதக்கி கீரை கலவையை அதில் கொட்டவும்.
  • *இரண்டு நிமிடம் வதக்கி சாதம் சேர்த்து இறக்கவும்.

தக்காளி சாதம்

தேவையான பொருட்கள்

  • உதிரியாக வடித்த சாதம் - 1கப்
  • வெங்காயம் - 2
  • தக்காளி - 3
  • பச்சை மிளகாய் - 1
  • கறிவேப்பிலை சிறிது,
  • கடுகு உளுந்து - 1/2 ஸ்பூன்
  • மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
  • உப்பு
  • எண்ணெய் தாளிக்க
  • வறுத்து அரைக்க:-(தண்ணிர் சேர்க்காமல் பொடியை போல்)
  • தனியா - 1 ஸ்பூன்
  • கடலை பருப்பு - 1ஸ்பூன்
  • உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 2
  • தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்

செய்முறை

  • வெங்காயம் தக்காளி,பச்சை மிளகாய் நீளமாக நறுக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து தாளித்து வெங்காய்ம் கறிவேப்பிலை ,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்,
  • பிறகு தக்காளி சேர்த்து கரையும் வரை வதக்கவும்
  • மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கி வறுத்து பொடித்த தூளை சேர்த்து ஒருமுறை கிளறி இறக்கவும்,
  • சாதத்தினை சேர்த்து நன்றாக கிளறி பறிமாறவும்

தேங்காய் சாதம்

தேவையான பொருட்கள்

  • உதிரியாக வடித்த சாதம் - 2 கப்
  • எண்ணை - 2 ஸ்பூன்
  • கடுகு - 1/2 ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
  • சின்ன வெங்காயம் - 5 பொடியாக நறுக்கியது
  • இஞ்சி - 1 துண்டு பொடியாக நறுக்கியது அல்லது துருவியது
  • பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கியது
  • கறிவேப்பிலை - 6 இலைகள்
  • முந்திரிப்பருப்பு - 6 பொடியாக நறுக்கியது
  • தேங்காய் துருவல் - 1/2 கப்

செய்முறை

  • எண்ணையை காயவைத்து அதில் கடுகு,உளுத்தம் பருப்பு சேர்த்து பொரிந்ததும் வெங்காயம்,இஞ்சி& பச்சை மிளகாய்,முந்திரி பருப்பு,கறிவேப்பிலை சேர்த்து ஒரே ஒரு நிமிடம் வதக்கவும்..எதுவும் நிறம் மாற தேவையில்லை
  • பிறகு தீயை அனைத்து விட்டு உடன் தேங்காய் துருவல் சாதம் சேர்த்து கிளறி இறக்கவும்

குறிப்பு:

இதற்கு வறுவல் வகைகள் நல்ல காம்பினேஷன்.இதில் வெங்காயம்,இஞ்சி யெல்லாம் அதிகம் வதங்காமல் கொஞ்சம் கரகரவென கடிக்கும் அளவு வதக்கினால் சுவையாக இருக்கும்

கேரட் சாதம்

தேவையான பொருட்கள்

  • வடித்த சாதம் - இருவருக்கான அளவு
  • கேரட் - 3 பெரியது
  • வெங்காயம் பெரியது - 2 பொடியாக நறுக்கியது
  • தேங்காய் துருவல் - 3/4 கப்
  • பச்சை மிளகாய் - 2 அல்லது 3
  • தேங்காய் எண்ணை - 3 ஸ்பூன்
  • கடுகு - 1/2 ஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை

  • கேரட்டை துருவிக் கொள்ளவும்.தேங்காயையும் பச்சை மிளகாயையும் தண்ணீரில்லாமல் அரைத்துக் கொள்ளவும்
  • தேங்காய் எண்ணை காயவைத்து அதில் கடுகு,கறுவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
  • பின் கேரட்டை கொட்டி உப்பு 1/2 ஸ்பூன் சேர்த்து கிளறி 3 நிமிடம் குறைந்த தீயில் இடையில் ஒரு முறை கிளறி விட எளிதில் வெந்து விடும்
  • பின் அரைத்த தேங்காயை கேரட்டுடன் கொட்டி ஒரு கிளறு கிளரி இறக்கவும்
  • அதனுடன் சாதத்தை கலந்து பரிமாறவும்

குறிப்பு:

3 நிமிடத்தில் இந்த சாதத்தை தயாரித்து விடலாம் ஆனால் சுவை அருமையாக இருக்கும்.லன்ச் பாக்ஸில் வைத்து அனுப்பலாம். இதனுடன் ஏதாவது வறுவல் ,வடகம் இருந்தால் நன்றாக இருக்கும்