மின்ட் ரொட்டி (Mint Roti)
தேவையானப் பொருட்கள்
- கோதுமை மாவு - 2 கப்
- புதினா - 1/2 கப்
- கொத்தமல்லி - 1/4 கப்
- பச்சை மிளகாய் - 1 (விரும்பினால்)
- உப்பு - ருசிகேற்ப
- நெய் - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
- கோதுமை மாவுடன் உப்பு கலந்து வைத்துக் கொள்ளவும். கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை மாவுடன் கலந்து வைக்கவும்.
- மாவுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் எண்ணெய் சேர்த்து பிசைந்து அரை மணி நேரம் வைத்திருக்கவும்.
- அதன் பின்னர் எடுத்து சப்பாத்தியாக தேய்த்துக் கொள்ளவும்.
- தவாவை அடுப்பில் வைத்து சப்பாத்தியை போட்டு நெய் ஊற்றி சுட்டு எடுக்கவும்.
- சுவையான மின்ட் ரொட்டி தயார்.
No comments:
Post a Comment