Wednesday, July 16, 2014

ரவா தோசை


தேவையான பொருட்கள்:-

ரவா - 1 கப் 
அரிசி மாவு - 1 1/2 கப்
மைதா - 1/2 கப் 
சீரகம், மிளகு - 1 ஸ்பூன் 
வெங்காயம் -- பொடிப்பொடியாக நறுக்கியது 
பச்சை மிளகாய் - 2 
கறிவேப்பிலை 
உப்பு -- தேவையான அளவு 



செய்முறை:- 

ரவா, அரிசிமாவு, மைதா மூன்றையும் நன்றாக தண்ணீர் விட்டு கலந்து, தோசை மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும். 

வெங்காயம், பச்சைமிளகாய் இரண்டையும் பொடிபொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம் தாளித்து , பின் வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை எல்லாம் போட்டு வதக்கி ,
தேவையான அளவு உப்பு சேர்த்து, கரைத்து வைத்துள்ள மாவுடன் கலந்து விடவும்..

சிறிது நேரம் கழித்து தோசை ஊற்றலாம்.. தேங்காய் சட்னியுடன் சாப்பிட ... நல்லா மொறுமொறுன்னு ஹோட்டல் தோசை போலவே இருக்கும்... 

No comments:

Post a Comment