ஈஸி கொண்டைக்கடலை சுண்டல்
தேவையானப் பொருட்கள்
- கொண்டைக்கடலை - ஒரு கப்
- உப்பு - தேவையான அளவு
- கடுகு - தாளிப்பதற்கு
- உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
- கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
- மிளகாய்வற்றல் - மூன்று
- பச்சை மிளகாய் - மூன்று
- துருவிய தேங்காய் - ஒரு கப்
- மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
- துருவிய இஞ்சி - ஒரு தேக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிதளவு
- பூண்டு - ஒரு பல்.
- எண்ணெய் - தாளிப்பதற்கு தேவையான அளவு
- கொண்டைக்கடலையை 2 மணி நேரம் ஊற வைத்து எடுத்து வேக வைத்து தண்ணீரை வடிகட்டி வைத்துக் கொள்ளவும்
- கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து வதக்கவும்.
- நசுக்கிய பூண்டு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கி இஞ்சியையும் அதனுடன் சேர்க்கவும்.
- பின்னர் இதில், வேக வைத்த கொண்டைக்கடலையை சேர்த்து வதக்கி விட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மூன்று நிமிடம் பிரட்டி விடவும்.
- எல்லாம் சேர்ந்து நன்கு வதங்கியவுடன் தேங்காய் துருவலை போட்டு ஒரு நிமிடம் கிளறவும்.
- சுவையான சத்தான ஈஸி கொண்டைக்கடலை சுண்டல் ரெடி.
No comments:
Post a Comment