வெஜிடபுள் ஸ்டஃப்டு சப்பாத்தி
தேவையானப் பொருட்கள்
- கோதுமை மாவு - 2 கப்
- பெரிய வெங்காயம் - ஒன்று
- முள்ளங்கி - ஒன்று
- காரட் - ஒன்று
- குடைமிளகாய் - பாதி
- உருளைக்கிழங்கு - 3
- உப்பு - அரை தேக்கரண்டி
- முள்ளங்கி, காரட் இரண்டையும் துருவி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், குடை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- மசித்த உருளைக்கிழங்குடன் வெங்காயம், முள்ளங்கி, காரட், குடைமிளகாய், உப்பு சேர்த்து பிசைந்து வைத்து கொள்ளவும்
- கோதுமை மாவுடன் தண்ணீர் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும். பிசைந்த மாவிலிருந்து ஒரு உருண்டை மாவை எடுத்து கட்டையில் வைத்து சப்பாத்தியாக இடவும்.
- அதில் செய்து வைத்திருக்கும் மசாலாவை வைத்து நான்கு புறமும் மூடி மீண்டும் சப்பாத்தியாக தேய்க்கவும்
- தோசைக் கல்லில் எண்ணெய் தடவி சப்பாத்தியை போட்டு மேலே எண்ணெய் தடவி வெந்ததும் எடுக்கவும்.
- சுவையான வெஜிடபுள் ஸ்டஃப்டு சப்பாத்தி ரெடி. இதை மாலை நேர சிற்றுண்டியாக சாஸுடன் பரிமாறலாம்.
No comments:
Post a Comment