தேவையான பொருட்கள்
- வடித்த சாதம் - இருவருக்கான அளவு
- கேரட் - 3 பெரியது
- வெங்காயம் பெரியது - 2 பொடியாக நறுக்கியது
- தேங்காய் துருவல் - 3/4 கப்
- பச்சை மிளகாய் - 2 அல்லது 3
- தேங்காய் எண்ணை - 3 ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை - கேரட்டை துருவிக் கொள்ளவும்.தேங்காயையும் பச்சை மிளகாயையும் தண்ணீரில்லாமல் அரைத்துக் கொள்ளவும்
- தேங்காய் எண்ணை காயவைத்து அதில் கடுகு,கறுவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
- பின் கேரட்டை கொட்டி உப்பு 1/2 ஸ்பூன் சேர்த்து கிளறி 3 நிமிடம் குறைந்த தீயில் இடையில் ஒரு முறை கிளறி விட எளிதில் வெந்து விடும்
- பின் அரைத்த தேங்காயை கேரட்டுடன் கொட்டி ஒரு கிளறு கிளரி இறக்கவும்
- அதனுடன் சாதத்தை கலந்து பரிமாறவும்
|
குறிப்பு:
3 நிமிடத்தில் இந்த சாதத்தை தயாரித்து விடலாம் ஆனால் சுவை அருமையாக இருக்கும்.லன்ச் பாக்ஸில் வைத்து அனுப்பலாம். இதனுடன் ஏதாவது வறுவல் ,வடகம் இருந்தால் நன்றாக இருக்கும்
No comments:
Post a Comment