Wednesday, September 30, 2009

மின்ட் ரொட்டி (Mint Roti)

தேவையானப் பொருட்கள்

  • கோதுமை மாவு - 2 கப்
  • புதினா - 1/2 கப்
  • கொத்தமல்லி - 1/4 கப்
  • பச்சை மிளகாய் - 1 (விரும்பினால்)
  • உப்பு - ருசிகேற்ப
  • நெய் - தேவையான அளவு
  • எண்ணெய் - தேவையான அளவு
Pudina Roti

  1. கோதுமை மாவுடன் உப்பு கலந்து வைத்துக் கொள்ளவும். கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை மாவுடன் கலந்து வைக்கவும்.
  3. மாவுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் எண்ணெய் சேர்த்து பிசைந்து அரை மணி நேரம் வைத்திருக்கவும்.
  4. அதன் பின்னர் எடுத்து சப்பாத்தியாக தேய்த்துக் கொள்ளவும்.
  5. தவாவை அடுப்பில் வைத்து சப்பாத்தியை போட்டு நெய் ஊற்றி சுட்டு எடுக்கவும்.
  6. சுவையான மின்ட் ரொட்டி தயார்.

ஈஸி கொண்டைக்கடலை சுண்டல்

தேவையானப் பொருட்கள்

  • கொண்டைக்கடலை - ஒரு கப்
  • உப்பு - தேவையான அளவு
  • கடுகு - தாளிப்பதற்கு
  • உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
  • கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
  • மிளகாய்வற்றல் - மூன்று
  • பச்சை மிளகாய் - மூன்று
  • துருவிய தேங்காய் - ஒரு கப்
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  • துருவிய இஞ்சி - ஒரு தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • பூண்டு - ஒரு பல்.
  • எண்ணெய் - தாளிப்பதற்கு தேவையான அளவு
  1. கொண்டைக்கடலையை 2 மணி நேரம் ஊற வைத்து எடுத்து வேக வைத்து தண்ணீரை வடிகட்டி வைத்துக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து வதக்கவும்.
  3. நசுக்கிய பூண்டு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கி இஞ்சியையும் அதனுடன் சேர்க்கவும்.
  4. பின்னர் இதில், வேக வைத்த கொண்டைக்கடலையை சேர்த்து வதக்கி விட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மூன்று நிமிடம் பிரட்டி விடவும்.
  5. எல்லாம் சேர்ந்து நன்கு வதங்கியவுடன் தேங்காய் துருவலை போட்டு ஒரு நிமிடம் கிளறவும்.
  6. சுவையான சத்தான ஈஸி கொண்டைக்கடலை சுண்டல் ரெடி.

கீரை வடை

தேவையானப் பொருட்கள்

  • பச்சரிசி மாவு - அரை படி
  • முருங்கைக்கீரை - 25 கொத்து
  • மிளகாய் தூள் - 3/4 மேசைக்கரண்டி
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  • சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
  • உப்பு - 1 1/2 தேக்கரண்டி
  • எண்ணெய் - ஒரு கப்
  • பச்சரிசியை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு எடுத்து தண்ணீரை வடித்து விட்டு நிழலில் உலர்த்தவும். அதிக நேரம் உலர்த்தாமல் அரிசியை கையில் எடுத்து பார்த்தால் கையில் ஒட்டாமல் இருக்கும் வரை காய்ந்தால் போதும். இந்த அரிசியை மிஷினில் கொடுத்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்
  • முருங்கைகீரையை சுத்தம் செய்து ஆய்ந்து தண்ணீரில் போட்டு அலசிக் கொள்ளவும்.
  • வாணலியில் அலசிய கீரையை போட்டு மேலே சிறிது தண்ணீர் தெளித்து 2 நிமிடம் பிரட்டி விடவும். இப்படி ஒரு முறை செய்தால் தான் மாவுடன் கீரை சேரும். பின்னர் எடுத்து சிறிது நேரம் ஆற வைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் மாவை போட்டு அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சோம்பு தூள், உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.
  • பிறகு வதக்கி ஆற வைத்த கீரையை மாவில் சேர்த்து அரை கப் தண்ணீரை தெளித்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும்
  • ப்ளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவிக் கொண்டு ஒரு தட்டில் வைத்து பிசைந்த மாவை ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து தட்டவும். மிகவும் மெல்லியதாக தட்ட வேண்டாம்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் தட்டி வைத்திருக்கும் வடையை போட்டு ஒரு நிமிடம் கழித்து திருப்பி போட்டு வெந்ததும் பொன்னிறமாக எடுக்கவும்.
  • கீரை வடை தயார். சாப்பிட நன்கு மொறு மொறுவென்று இருக்கும். மாலை நேர சிற்றுண்டியாக செய்துக் கொடுக்கலாம்

வெஜிடபுள் ஸ்டஃப்டு சப்பாத்தி

தேவையானப் பொருட்கள்

  • கோதுமை மாவு - 2 கப்
  • பெரிய வெங்காயம் - ஒன்று
  • முள்ளங்கி - ஒன்று
  • காரட் - ஒன்று
  • குடைமிளகாய் - பாதி
  • உருளைக்கிழங்கு - 3
  • உப்பு - அரை தேக்கரண்டி
  1. முள்ளங்கி, காரட் இரண்டையும் துருவி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், குடை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  3. மசித்த உருளைக்கிழங்குடன் வெங்காயம், முள்ளங்கி, காரட், குடைமிளகாய், உப்பு சேர்த்து பிசைந்து வைத்து கொள்ளவும்
  4. கோதுமை மாவுடன் தண்ணீர் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும். பிசைந்த மாவிலிருந்து ஒரு உருண்டை மாவை எடுத்து கட்டையில் வைத்து சப்பாத்தியாக இடவும்.
  5. அதில் செய்து வைத்திருக்கும் மசாலாவை வைத்து நான்கு புறமும் மூடி மீண்டும் சப்பாத்தியாக தேய்க்கவும்
  6. தோசைக் கல்லில் எண்ணெய் தடவி சப்பாத்தியை போட்டு மேலே எண்ணெய் தடவி வெந்ததும் எடுக்கவும்.
  7. சுவையான வெஜிடபுள் ஸ்டஃப்டு சப்பாத்தி ரெடி. இதை மாலை நேர சிற்றுண்டியாக சாஸுடன் பரிமாறலாம்.


Saturday, September 19, 2009

Padma Samayal




யாவரும் எளிதாக சமைக்கும் வண்ணம், படிப்படியான செய்முறை விளக்கப்படங்களுடன் கூடிய நூற்றுக்கணக்கான குறிப்புகள்.. தெளிவானப் படங்களுடன் தினமும் ஒரு புது குறிப்பு.. நீங்கள் எளிதாய் சமையல் கற்றுக்கொள்ள, அனுபவம் வாய்ந்த இல்லத்தரசிகள் உங்களுக்கு உதவும் பகுதி இது.

புதினா துவையல்


தேவையானப் பொருட்கள்

  • புதினா - ஒரு கட்டு
  • தேங்காய் - அரை மூடி
  • மிளகாய் வற்றல் - 12
  • புளி - சிறு நெல்லிக்காய் அளவு
  • உப்பு - ஒரு தேக்கரண்டி
  • உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
  • பெருங்காயத் தூள் - அரை தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து
  • கடுகு - அரை தேக்கரண்டி
  • எண்ணெய் - ஒன்றரை மேசைக்கரண்டி


  • புதினா இலைகளை ஆய்ந்து கொண்டு தண்ணீரில் அலசிக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். மிளகாய் வற்றலை இரண்டாக கிள்ளி எடுத்துக் கொள்ளவும்.

  • வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு போட்டு 30 நொடி சிவக்க வறுக்கவும்.

  • பருப்பு சிவந்ததும் கிள்ளி வைத்திருக்கும் மிளகாய் வற்றல் மற்றும் புளி போட்டு ஒரு நிமிடம் வறுக்கவும்.

  • ஒரு நிமிடம் கழித்து அலசி வைத்திருக்கும் புதினாவை போட்டு 2 நிமிடம் வதக்கவும். புதினா இலை லேசாக நிறம் மாறியதும் அடுப்பில் இருந்து எடுத்து ஆற விடவும்.
  • வாணலியில் அரை மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்

  • பிறகு மிக்ஸியில் வதக்கிய பொருட்களுடன் உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைக்கவும். அதன் பின்னர் அரைத்த துவையலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். பிறகு அதில் தாளித்த பொருட்களை கொட்டி கலந்துக் கொள்ளவும்.
  • இந்த துவையலை சாதத்துடன் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இட்லி மற்றும் தோசைக்கு கூட சேர்த்து சாப்பிடலாம்




Friday, September 18, 2009

Padma Special

About Me:

My Hobbies : Cooking, Watching Tv, Reading Novels, Books.