Tuesday, August 30, 2011

ஆலு கோபி ப்ரை(Alu Gopi Fry)

  • ஆலு (உருளை) - இரண்டு
  • கோபி (காலிஃப்ளவர்) - சிறிய பூ ஒன்று
  • தாளிக்க‌:
  • எண்ணெய் - 4 தேக்கரண்டி
  • க‌டுகு ‍ - அரை தேக்க‌ர‌ண்டி
  • உளுத்த‌ம்ப‌ருப்பு - ஒரு தேக்க‌ர‌ண்டி
  • காய்ந்த‌ மிள‌காய் - மூன்று
  • க‌றிவேப்பிலை - சிறிது
  • காஷ்மீரி சில்லி பொடி - ஒரு தேக்க‌ர‌ண்டி
  • ம‌ஞ்ச‌ள் தூள் - கால் தேக்க‌ர‌ண்டி
  • உப்பு - தேவைக்கு
  • பூண்டு பொடி(அ) பெருங்காயப்பொடி
  • காலிஃப்ளவ‌ரை பெரிய‌ பூக்க‌ளாக‌ பிரித்தெடுக்க‌வும். உருளையையும் பெரிய‌ துண்டுக‌ளாக‌ ந‌றுக்க‌வும், ஒரு ச‌ட்டியில் வெந்நீரை கொதிக்க‌ வைத்து கொஞ்ச‌மாக‌ உப்பு சேர்த்து காலிஃப்ளவ‌ரையும், உருளையையும் அதில் போட்டு ப‌த்து நிமிட‌ம் ஊற‌வைத்து வெந்நீரை வ‌டித்துவிட‌வும்.
  • ஒரு பெரிய‌ வாணலியை காய‌வைத்து அதில் எண்ணெய், க‌டுகு, உளுத்தம்ப‌ருப்பு, காய்ந்த ‌மிள‌காய், க‌றிவேப்பிலை சேர்த்து தாளிக்க‌வும்.
  • வ‌டித்து வைத்த‌ காலிஃப்ளவ‌ர் ம‌ற்றும் உருளையை சேர்த்து ந‌ன்கு கிளற‌வும்.
  • மீண்டும் கிள‌றி மூடி போட்டு தீயின் அளவை குறைத்து வைத்து ஐந்து நிமிட‌ம் வேக‌விட‌வும்.
  • பிற‌கு மிள‌காய் தூள், ம‌ஞ்ச‌ள் தூள், உப்பு தூள் சேர்த்து (பெருங்காய‌ பொடி (அ) பூண்டு பொடி ஒரு சிட்டிகை தூவி மீண்டும் ஐந்து நிமிட‌ம் வேக‌ விட‌வும்.
  • க‌டைசியாக‌ தீயின் அள‌வை அதிக‌ப்ப‌டுத்தி மொறுக‌லாக‌ வ‌றுத்து அடுப்பை அணைக்க‌வும்.
  • சுவையான‌ கார‌சார‌மான‌ ஆலு கோபி ரெடி.

சென்னா தால் வடை(Chenna Dal Vada)

  • வெள்ளை சென்னா(கொண்டைக்கடலை) - 200 கிராம்
  • காய்ந்த மிளகாய் - மூன்று
  • பட்டை ‍ - ஒரு அங்குலம் சைஸ்
  • சோம்பு - ஒரு தேக்கரண்டி
  • இட்லி சோடா - ஒரு பின்ச்
  • உப்பு - தேவைக்கு
  • பூண்டு - இர‌ண்டு ப‌ல்
  • சின்ன வெங்காயம் - எட்டு
  • பச்சை மிளகாய் - ஒன்று
  • துருவிய‌ இஞ்சி - ஒரு தேக்க‌ர‌ண்டி
  • க‌றிவேப்பிலை - சிறிது
  • கொத்தம‌ல்லி - சிறிது
  • வெள்ளை சென்னாவை எட்டு ம‌ணி நேர‌ம் ஊற‌ வைக்க‌வும்.
  • ஊறவைத்த சென்னாவை நன்கு க‌ளைந்து த‌ண்ணீரை வ‌டித்து வைக்க‌வும்.
  • முத‌லில் சோம்பு, காய்ந்த மிள‌காய், ப‌ட்டையை திரித்து கொண்டு சென்னாவை கொஞ்சமாக‌ போட்டு பூண்டு சேர்த்து நன்கு அரைக்க‌வும்.
  • மீதியை போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
  • வெங்காய‌ம், ப‌ச்சைமிள‌காய், கொத்தம‌ல்லி, க‌றிவேப்பிலை, துருவிய‌ இஞ்சி, உப்பு, சிறிது இட்லி சோடா க‌ல‌ந்து அரைத்த‌ க‌ல‌வையுட‌ன் ந‌ன்கு க‌ல‌க்க‌வும்.
  • வ‌டைக‌ளாக‌ சுட்டெடுக்க‌வும்

தக்காளி இஞ்சி சட்னி (Tomatoe Ginger Chutney)

  • அரைக்க‌:
  • நன்கு பழுத்த தக்காளி - நான்கு
  • இஞ்சி - ஒரு அங்குல துண்டு
  • காய்ந்த மிளகாய் - ஒன்று
  • தேங்காய் துருவல் - ஒரு மேசைக்கரண்டி
  • உப்பு - சிறிது
  • தாளிக்க‌:
  • எண்ணெய் - அரை தேக்கரண்டி
  • கடுகு - கால் தேக்கரண்டி
  • பெருங்காயம் - ஒரு பின்ச்
  • த‌க்காளியை பொடியாக‌ நறுக்கவும். இஞ்சியை தோல் நீக்கி பொடியாக‌ நறுக்கி அத்துட‌ன் த‌க்காளி, உப்பு, காய்ந்த மிள‌காய், தேங்காய் துருவல் சேர்த்து ந‌ன்கு அரைக்க‌வும்.
  • தாளிக்க‌ கொடுத்துள்ள‌வைக‌ளை தாளித்து சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
  • சுவையான‌ த‌க்காளி இஞ்சி ச‌ட்னி ரெடி

வெஜ் பிரியாணி

  • தரமான பாசுமதி அரிசி - 300 கிராம்
  • தக்காளி - 150 கிராம்
  • வெங்காயம் - 150 கிராம்
  • உருளை - 100 கிராம்
  • கேரட் - 100 கிராம்
  • ப‌ட்டாணி, பீன்ஸ், கார்ன் - 75 கிராம் (த‌லா 25 கிராம்)
  • மிள‌காய் தூள் - ஒரு தேக்க‌ர‌ண்டி
  • ம‌ஞ்ச‌ள் தூள் - கால் தேக்க‌ர‌ண்டி
  • உப்பு - ருசிக்கு தேவையான‌ அள‌வு
  • தயிர் - இரண்டு மேசைக்கரண்டி
  • எலுமிச்சை பழம் - பாதி
  • ப‌ச்சை மிள‌காய் - இர‌ண்டு
  • கொத்தமல்லி தழை - கால் கட்டு
  • புதினா - கால் கட்டு
  • எண்ணெய் - 75 மில்லி
  • நெய் - இர‌ண்டு தேக்க‌ர‌ண்டி
  • ப‌ட்டை, கிராம்பு, ஏல‌ம் - த‌லா ஒன்று
வெங்காயம், தக்காளி, காய்கறிகளை நறுக்கி வைக்கவும். அரிசியை 20 நிமிடம் ஊற வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வெடிக்க விட்டு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, தக்காளி, பச்சை மிளகாய், முக்கால் பாகம் கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கி மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி சிம்மில் வைத்து தக்காளி சிறிது மசியும் வரை வேக விடவும்.

தக்காளி வதங்கியதும் அதில் உருளை, பீன்ஸ், கேரட் சேர்த்து கிளறி 5 நிமிடம் வேக விடவும்.

அதன் பிறகு கார்ன், பட்டாணி, தயிர் சேர்த்து கிளறி சிம்மில் வைத்து ஐந்து நிமிடம் நன்கு திக்காக விடவும்.

தண்ணீர் அளந்து ஊற்றவும், 300 கிராம் அரிசி என்பது ஒன்றரை ஆழாக்கு (டம்ளர்) வரும், ஒன்றரை டம்ளருக்கு ஒன்றரை மடங்கு பங்கு தண்ணீர் ஊற்றவும். 1 1/2 + 3/4 டம்ளர்.

தண்ணீர் ஊற்றி கிளறி விட்டு ஒரு கொதி வந்ததும் அரிசியை போடவும்.

முக்கால் பாகம் வெந்து வரும் போது மீதி உள்ள கொத்தமல்லி, புதினா, ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து குக்கரை மூடி வெயிட் போட்டு தீயின் அனலை மிதமாக வைத்து இரண்டு விசில் விட்டு மூன்றாவது விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

ஐந்து நிமிடம் கழித்து ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து கிளறி விடவும்.

சுவையான வெஜ் பிரியாணி ரெடி. தயிர் பச்சடி, சாலடுடன் சாப்பிடவும்.

சேலம் மீன் குழம்பு

மீன் - அரைக் கிலோ

  • சின்ன வெங்காயம் - 10


  • பூண்டு - 8 பல்


  • தக்காளி - ஒன்று


  • மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி


  • புளி ‍- ஒரு எலுமிச்சை அள‌வு


  • வெந்தயம் - ஒரு தேக்கரண்டி


  • உப்பு - தேவையான அளவு


  • நல்லெண்ணெய் - ஒரு குழம்பு கரண்டி


  • வதக்கி அரைக்க:


  • சீரகம் - ஒரு தேக்கரண்டி


  • மிளகு ‍- அரை தேக்கரண்டி


  • சின்ன வெங்காயம் -‍ 10 + 1 பெரிய‌ வெங்காய‌ம்


  • பூண்டு - 10 பல்


  • தக்காளி -‍ 3


  • தேங்காய் பொடி - 3 தேக்கரண்டி


  • மிளகாய் தூள் -‍ ஒரு தேக்கரண்டி


  • தனியா தூள் - ஒரு மேசைக்கரண்டி


  • தாளிக்க:


  • கறிவேப்பிலை - சிறிது


  • கடுகு - அரை தேக்கரண்டி


  • சீரகம் - கால் தேக்கரண்டி


  • வெந்தயம் - கால் தேக்கரண்டி


  • எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி


  • கொத்தம‌ல்லி த‌ழை - சிறிது (க‌டைசியாக குழம்பின் மேல் தூவ‌)


  • மீனை சுத்தம் செய்து உப்பு, மஞ்சள் தூள் தேய்த்து கழுவி வைக்கவும். வெங்காயம், பூண்டை தோல் உரித்து இரண்டாக நறுக்கி வைக்கவும். தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். புளியை அரை டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

    வாணலியில் அரை தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், வெங்காயம், பூண்டு, தக்காளி, தேங்காய் பவுடர், அதனுடன் தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கி ஆறியதும் நைசாக அரைக்கவும்.

    அரைத்த விழுதை புளிக்கரைசலுடன் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.

    வாணலியில் மீதி எண்ணெயை ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து இரண்டாக நறுக்கிய பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

    நன்கு வதங்கியதும் கரைத்து வைத்த புளிக்கரைசலை ஊற்றி மஞ்சள் தூள், உப்பு போட்டு கொதிக்க விடவும்.

    குழம்பு கெட்டியானதும் சுத்தம் செய்து வைத்திருக்கும் மீனை சேர்க்கவும்.

    மீன் வெந்ததும் வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து, நைசாக பொடித்து குழம்பில் போட்டு இறக்கவும்.

    நல்லெண்ணையை குழம்புக் கரண்டியில் ஊற்றி அடுப்பில் சூடு பண்ணவும். நன்கு சூடேறியதும் கரண்டியோடு சேர்த்து குழம்புக்குள் விட்டு கலக்கி மூடவும்

    கொத்தம‌ல்லி த‌ழை தூவி இறக்கவும். மணமணக்கும் கலர்ஃபுல்லான மீன் குழம்பு தயார். 

    இஞ்சி சப்பாத்தி

    • கோதுமை மாவு - கால் கிலோ
    • உப்பு - ஒரு தேக்கரண்டி
    • பட்டர் (அ) நெய் - ஒரு மேசைக்கரண்டி
    • இஞ்சிச்சாறு - ஒரு மேசைக்கரண்டி
    • பச்சைமிளகாய் பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
    • சர்க்கரை - ஒரு தேக்கரண்டி
    • கோதுமை மாவில் உப்பு, பச்சைமிளகாய் பேஸ்ட், இஞ்சிச்சாறு, சர்க்கரை சேர்த்து வெது வெதுப்பான வெந்நீரில் குழைக்கவும்.
    • பிறகு அதை சப்பாத்தியாகவோ, கொசுவம் வைத்து பரோட்டா போன்று இல்லை வேண்டிய வடிவில் செய்து த‌வாவில் போட்டு சுட்டெடுக்க‌வும்
    • பெரியவர்களுக்கு பட்டர், நெய்க்கு பதில் ஆலிவ் ஆயில் சேர்த்து குழைத்து கொள்ளலாம்.
    • பனீர் மின்ட் கறி, வெஜ் குருமா, மட்டன் சிக்கன் குருமா போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.

    ர‌ச‌ ம‌லாய்

    • கொதிக்க வைக்க:
    • பால் - ஒரு லிட்டர்
    • ஏலக்காய் - இரண்டு
    • குங்குமப்பூ - ஒரு தேக்கரண்டி
    • பாதாம், பிஸ்தா, முந்திரி - த‌லா ஐந்து
    • சர்க்கரை - 150 கிராம்
    • மாவாக கலக்கி கொள்ள:
    • பால் பவுடர் - ஒரு ஆழாக்கு (200 கிராம்)
    • முட்டை - ஒன்று
    • பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரன்டி
    • நெய் - ஒரு தேக்கரன்டி (உருக்கியது)
    பிஸ்தா, பாதாம், முந்திரியை வெந்நீரில் போட்டு பொடியாக‌ நீள‌வாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அதனுடன் ஏலக்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து காய்ச்சவும்.

    பால் நன்கு கொதித்து சுண்டி வந்ததும் தீயை குறைத்து வைக்கவும்.

    பால் பவுடருடன் முட்டை, பேக்கிங் பவுடர், நெய் ஆகியவற்றை சேர்த்து ஃபோர்க்கால் நன்கு கிளறி விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்துக் கொள்ளவும்.

    பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறு கொட்டை பாக்கு அளவு உருண்டைகளாக உருட்டி வேண்டிய வடிவத்தில் செய்துக் கொள்ளாவும்.

    கொதித்து கொண்டிருக்கும் பாலில் சஃப்ரானை தூவி செய்து வைத்திருக்கும் உருண்டைகளை போட்டு அடுப்பை அணைத்து விடவும்.

     உருண்டைகளை சேர்த்ததும் கரண்டியை வைத்து கிளறி விடாமல் சட்டியை இருபுறமும் துணியை பிடித்து தூக்கி ஒரு முறை சுழற்றி விட்டு வைக்கவும்.

    பாலுடன் சேர்ந்து நன்கு ஆற வைத்து பின்னர் ப்ரிட்ஜில் வைத்திருந்து குளிர்ந்ததும் எடுத்து கப்பில் ஊற்றி நட்ஸ் வகைகளை மேலே தூவி பரிமாறவும். சுவையான கோடைக்கேற்ற குளிர்ச்சியான ரசமலாய் ரெடி.