- ஓட்ஸ்- ஒரு கப்
- அரிசி மாவு- கால் கப்
- ரவை- அரை கப்
- தயிர்- 1 கப்
- தண்ணீர்- தேவைக்கு
- உப்பு- தேவைக்கு
- எண்ணெய் அல்லது வெண்ணெய்- சிறிதளவு
- ஓட்ஸ் மற்றும் ரவையை குறைந்தது 15 முதல் இருபது நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும்
- ஊறிய ஓட்ஸ் மற்றும் ரவையை தேவையான அளவு உப்பு இட்டு கையாலேயே பிசைந்துக்கொள்ளவும்.
- அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும். அத்துடன் தயிரையும் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கொண்டுவரவும்.
- அரை மணி நேரம் கழித்து தோசைக் கல்லை மிதமான சூட்டில் வைத்து இந்த மாவை தோசைக்கு ஊற்றுவது போல் நடுவில் ஊற்றாமல் தோசைக் கல்லை சுற்றி ஊத்தி நடுவில் கொண்டு வர வேண்டும்.
- மாவும் கொஞ்சம் தண்ணீர் போல் தான் இருக்கும். அதனால் தானாக நடுவில் வந்து கூடிவிடும்.
- எண்ணெய் விட்டு பின் திருப்பி போட்டு எடுக்கவும்.
- மொறு மொறு ஓட்ஸ் தோசை ரெடி.
Monday, October 1, 2012
ஓட்ஸ் ரவா தோசை
ஈசி ப்ரெட் உப்புமா
- ப்ரெட் பொடித்தது - 2கப்
- வெங்காயம் - 1
- உப்பு- தேவையான அளவு
- தாளிக்க:
- எண்ணெய்- 1மேசைக்கரண்டி
- மிளகாய் வற்றல் - 3 அல்லது 4
- கறிவேப்பிலை - 1 இனுக்கு
- கடுகு- 1/2 தேக்கரண்டி
- உளுந்து- 1மேசைக்கரண்டி
- ப்ரெட் ஸ்லைஸ்களை மிக்சியில் இட்டு பொடியாக்கவும்.
- வாணலியில் எண்ணெய் சூடாக்கி தாளிக்க கொடுத்தவற்றை போட்டு தாளித்து வெங்காயம் உப்பு சேர்த்து 2நிமிடம் வதக்கவும்.
- பொடித்த ப்ரெட் சேர்த்து மேலும் 1நிமிடம் கிளறி இறக்கவும்.
- சுவையான ப்ரெட் உப்புமா தயார்,
- Note:
- உப்பு வெங்காயத்திற்கு தேவையான அளவு மட்டும் சேர்த்தால் போதுமானது. தேங்காய் துருவல், வறுத்த வேர்க்கடலையும், முந்திரி பருப்பு சேர்த்தும் சுவையை அதிகரிக்கலாம்.
Tuesday, August 30, 2011
பனீர் மின்ட் கறி (Paneer Mint Curry)
- வதக்கி அரைக்க:
- புதினா - ஒரு கட்டு
- கொத்தமல்லி - அரை கட்டு
- கறிவேப்பிலை - கால் கட்டு
- பச்சை மிளகாய் - நான்கு
- இஞ்சி - ஒரு எலுமிச்சை அளவு
- பூண்டு - 5 பல்
- வெங்காயம் - மூன்று
- தக்காளி - நான்கு
- உப்பு - ஒரு தேக்கரண்டி
- எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
- வேக வைக்க:
- மிக்ஸ்ட் வெஜிடேபுள்ஸ் - 300 கிராம்
- உப்பு - அரை தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
- பனீர் - 200 கிராம்
- தாளிக்க:
- எண்ணெய் + பட்டர் - ஒரு மேசைக்கரண்டி
- சீரகம் - ஒரு தேக்கரண்டி
- காய்கறிகள் அனைத்தையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையானவற்றை அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
- நறுக்கி வைத்திருக்கும் காய்களை குக்கரில் அல்லது மைக்ரோவேவில் உப்பு, மஞ்சள் தூள், சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். அதனுடன் கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- வதக்கியவற்றை எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் போட்டு தாளிக்கவும்.
- அதில் அரைத்த விழுதை ஊற்றி கொதிக்க விடவும். அதனுடனேயே பனீரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- அதனுடனேயே பனீரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- பனீர் நன்கு வேக, கடாயை தட்டை வைத்து மூடி கொதிக்க விடவும்.
- இப்பொழுது வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் காய்களை சேர்த்து மீண்டும் நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.
- சுவையான ஆரோக்கியம் நிறைந்த பனீர் மின்ட் கறி ரெடி.
ஆலு கோபி ப்ரை(Alu Gopi Fry)
- ஆலு (உருளை) - இரண்டு
- கோபி (காலிஃப்ளவர்) - சிறிய பூ ஒன்று
- தாளிக்க:
- எண்ணெய் - 4 தேக்கரண்டி
- கடுகு - அரை தேக்கரண்டி
- உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - மூன்று
- கறிவேப்பிலை - சிறிது
- காஷ்மீரி சில்லி பொடி - ஒரு தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
- உப்பு - தேவைக்கு
- பூண்டு பொடி(அ) பெருங்காயப்பொடி
- காலிஃப்ளவரை பெரிய பூக்களாக பிரித்தெடுக்கவும். உருளையையும் பெரிய துண்டுகளாக நறுக்கவும், ஒரு சட்டியில் வெந்நீரை கொதிக்க வைத்து கொஞ்சமாக உப்பு சேர்த்து காலிஃப்ளவரையும், உருளையையும் அதில் போட்டு பத்து நிமிடம் ஊறவைத்து வெந்நீரை வடித்துவிடவும்.
- ஒரு பெரிய வாணலியை காயவைத்து அதில் எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- வடித்து வைத்த காலிஃப்ளவர் மற்றும் உருளையை சேர்த்து நன்கு கிளறவும்.
- மீண்டும் கிளறி மூடி போட்டு தீயின் அளவை குறைத்து வைத்து ஐந்து நிமிடம் வேகவிடவும்.
- பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு தூள் சேர்த்து (பெருங்காய பொடி (அ) பூண்டு பொடி ஒரு சிட்டிகை தூவி மீண்டும் ஐந்து நிமிடம் வேக விடவும்.
- கடைசியாக தீயின் அளவை அதிகப்படுத்தி மொறுகலாக வறுத்து அடுப்பை அணைக்கவும்.
- சுவையான காரசாரமான ஆலு கோபி ரெடி.
சென்னா தால் வடை(Chenna Dal Vada)
- வெள்ளை சென்னா(கொண்டைக்கடலை) - 200 கிராம்
- காய்ந்த மிளகாய் - மூன்று
- பட்டை - ஒரு அங்குலம் சைஸ்
- சோம்பு - ஒரு தேக்கரண்டி
- இட்லி சோடா - ஒரு பின்ச்
- உப்பு - தேவைக்கு
- பூண்டு - இரண்டு பல்
- சின்ன வெங்காயம் - எட்டு
- பச்சை மிளகாய் - ஒன்று
- துருவிய இஞ்சி - ஒரு தேக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிது
- கொத்தமல்லி - சிறிது
- வெள்ளை சென்னாவை எட்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
- ஊறவைத்த சென்னாவை நன்கு களைந்து தண்ணீரை வடித்து வைக்கவும்.
- முதலில் சோம்பு, காய்ந்த மிளகாய், பட்டையை திரித்து கொண்டு சென்னாவை கொஞ்சமாக போட்டு பூண்டு சேர்த்து நன்கு அரைக்கவும்.
- மீதியை போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
- வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, துருவிய இஞ்சி, உப்பு, சிறிது இட்லி சோடா கலந்து அரைத்த கலவையுடன் நன்கு கலக்கவும்.
- வடைகளாக சுட்டெடுக்கவும்
தக்காளி இஞ்சி சட்னி (Tomatoe Ginger Chutney)
- அரைக்க:
- நன்கு பழுத்த தக்காளி - நான்கு
- இஞ்சி - ஒரு அங்குல துண்டு
- காய்ந்த மிளகாய் - ஒன்று
- தேங்காய் துருவல் - ஒரு மேசைக்கரண்டி
- உப்பு - சிறிது
- தாளிக்க:
- எண்ணெய் - அரை தேக்கரண்டி
- கடுகு - கால் தேக்கரண்டி
- பெருங்காயம் - ஒரு பின்ச்
- தக்காளியை பொடியாக நறுக்கவும். இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி அத்துடன் தக்காளி, உப்பு, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு அரைக்கவும்.
- தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
- சுவையான தக்காளி இஞ்சி சட்னி ரெடி
வெஜ் பிரியாணி
- தரமான பாசுமதி அரிசி - 300 கிராம்
- தக்காளி - 150 கிராம்
- வெங்காயம் - 150 கிராம்
- உருளை - 100 கிராம்
- கேரட் - 100 கிராம்
- பட்டாணி, பீன்ஸ், கார்ன் - 75 கிராம் (தலா 25 கிராம்)
- மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
- உப்பு - ருசிக்கு தேவையான அளவு
- தயிர் - இரண்டு மேசைக்கரண்டி
- எலுமிச்சை பழம் - பாதி
- பச்சை மிளகாய் - இரண்டு
- கொத்தமல்லி தழை - கால் கட்டு
- புதினா - கால் கட்டு
- எண்ணெய் - 75 மில்லி
- நெய் - இரண்டு தேக்கரண்டி
- பட்டை, கிராம்பு, ஏலம் - தலா ஒன்று
குக்கரில் எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வெடிக்க விட்டு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, தக்காளி, பச்சை மிளகாய், முக்கால் பாகம் கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கி மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி சிம்மில் வைத்து தக்காளி சிறிது மசியும் வரை வேக விடவும்.
தக்காளி வதங்கியதும் அதில் உருளை, பீன்ஸ், கேரட் சேர்த்து கிளறி 5 நிமிடம் வேக விடவும்.
அதன் பிறகு கார்ன், பட்டாணி, தயிர் சேர்த்து கிளறி சிம்மில் வைத்து ஐந்து நிமிடம் நன்கு திக்காக விடவும்.
தண்ணீர் அளந்து ஊற்றவும், 300 கிராம் அரிசி என்பது ஒன்றரை ஆழாக்கு (டம்ளர்) வரும், ஒன்றரை டம்ளருக்கு ஒன்றரை மடங்கு பங்கு தண்ணீர் ஊற்றவும். 1 1/2 + 3/4 டம்ளர்.
தண்ணீர் ஊற்றி கிளறி விட்டு ஒரு கொதி வந்ததும் அரிசியை போடவும்.
முக்கால் பாகம் வெந்து வரும் போது மீதி உள்ள கொத்தமல்லி, புதினா, ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து குக்கரை மூடி வெயிட் போட்டு தீயின் அனலை மிதமாக வைத்து இரண்டு விசில் விட்டு மூன்றாவது விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
ஐந்து நிமிடம் கழித்து ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து கிளறி விடவும்.
சுவையான வெஜ் பிரியாணி ரெடி. தயிர் பச்சடி, சாலடுடன் சாப்பிடவும்.
Subscribe to:
Comments (Atom)