Monday, October 1, 2012

வெஜிடபிள் கிச்சடி


  • வெள்ளை ரவை - கால் கிலோ
  • கேரட் - 2
  • பீன்ஸ் - 10
  • பட்டாணி - 50 கிராம்
  • பச்சைமிளகாய் - 4
  • பெரிய வெங்காயம் - 2
  • இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
  • உப்பு
  • கறிவேப்பிலை, மல்லி தழை
  • சர்க்கரை - 2 தேக்கரண்டி
  • தாளிக்க:
  • ஏலக்காய் - 2
  • கிராம்பு - 3
  • பட்டை - சிறு துண்டு
  • பிரிஞ்சி இலை - 1
  • சோம்பு - ஒரு தேக்கரண்டி
  • எண்ணெய் + நெய் - 100 மி.லி

  • ரவையை வெறும் கடாயில் வறுக்கவும். காய்களை பொடியாக நறுக்கி வைக்கவும். தாளிக்க கூறியுள்ள பொருட்களை லேசாக தட்டி வைக்கவும்
  • கடாயில் எண்ணெய், நெய் விட்டு தாளிக்கும் பொருட்களை போட்டு தாளிக்கவும்.
  • பின்னர் காய்கறி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் ரவையின் அளவிற்கு மூன்று பங்கு தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள், சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.
  • கொதித்ததும் ரவையை சேர்த்து கிளறி அடுப்பை சிம்மில் வைத்து மூடி வைக்கவும். அடிக்கடி கிளறி விடவும். வெந்ததும் மல்லித்தழை வறுத்த முந்திரி தூவி அலங்கரிக்கவும். தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்

ஓட்ஸ் ரவா தோசை


  • ஓட்ஸ்- ஒரு கப்
  • அரிசி மாவு- கால் கப்
  • ரவை- அரை கப்
  • தயிர்- 1 கப்
  • தண்ணீர்- தேவைக்கு
  • உப்பு- தேவைக்கு
  • எண்ணெய் அல்லது வெண்ணெய்- சிறிதளவு

  • ஓட்ஸ் மற்றும் ரவையை குறைந்தது 15 முதல் இருபது நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும்
  • ஊறிய ஓட்ஸ் மற்றும் ரவையை தேவையான அளவு உப்பு இட்டு கையாலேயே பிசைந்துக்கொள்ளவும்.
  • அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும். அத்துடன் தயிரையும் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கொண்டுவரவும்.
  • அரை மணி நேரம் கழித்து தோசைக் கல்லை மிதமான சூட்டில் வைத்து இந்த மாவை தோசைக்கு ஊற்றுவது போல் நடுவில் ஊற்றாமல் தோசைக் கல்லை சுற்றி ஊத்தி நடுவில் கொண்டு வர வேண்டும்.
  • மாவும் கொஞ்சம் தண்ணீர் போல் தான் இருக்கும். அதனால் தானாக நடுவில் வந்து கூடிவிடும்.
  • எண்ணெய் விட்டு பின் திருப்பி போட்டு எடுக்கவும்.
  • மொறு மொறு ஓட்ஸ் தோசை ரெடி.

ஈசி ப்ரெட் உப்புமா


  • ப்ரெட் பொடித்தது - 2கப்
  • வெங்காயம் - 1
  • உப்பு- தேவையான அளவு
  • தாளிக்க:
  • எண்ணெய்- 1மேசைக்கரண்டி
  • மிளகாய் வற்றல் - 3 அல்லது 4
  • கறிவேப்பிலை - 1 இனுக்கு
  • கடுகு- 1/2 தேக்கரண்டி
  • உளுந்து- 1மேசைக்கரண்டி


  • ப்ரெட் ஸ்லைஸ்களை மிக்சியில் இட்டு பொடியாக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் சூடாக்கி தாளிக்க கொடுத்தவற்றை போட்டு தாளித்து வெங்காயம் உப்பு சேர்த்து 2நிமிடம் வதக்கவும்.
  • பொடித்த ப்ரெட் சேர்த்து மேலும் 1நிமிடம் கிளறி இறக்கவும்.
  • சுவையான ப்ரெட் உப்புமா தயார்,
  • Note:
  • உப்பு வெங்காயத்திற்கு தேவையான அளவு மட்டும் சேர்த்தால் போதுமானது. தேங்காய் துருவல், வறுத்த வேர்க்கடலையும், முந்திரி பருப்பு சேர்த்தும் சுவையை அதிகரிக்கலாம்.

Tuesday, August 30, 2011

பனீர் மின்ட் கறி (Paneer Mint Curry)

  • வதக்கி அரைக்க:
  • புதினா - ஒரு கட்டு
  • கொத்தமல்லி - அரை கட்டு
  • கறிவேப்பிலை - கால் கட்டு
  • பச்சை மிளகாய் - நான்கு
  • இஞ்சி - ஒரு எலுமிச்சை அளவு
  • பூண்டு - 5 பல்
  • வெங்காயம் - மூன்று
  • தக்காளி - நான்கு
  • உப்பு - ஒரு தேக்கரண்டி
  • எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
  • வேக வைக்க:
  • மிக்ஸ்ட் வெஜிடேபுள்ஸ் - 300 கிராம்
  • உப்பு - அரை தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
  • பனீர் - 200 கிராம்
  • தாளிக்க:
  • எண்ணெய் + பட்டர் - ஒரு மேசைக்கரண்டி
  • சீரகம் - ஒரு தேக்கரண்டி
  • காய்கறிகள் அனைத்தையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையானவற்றை அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
  • நறுக்கி வைத்திருக்கும் காய்களை குக்கரில் அல்லது மைக்ரோவேவில் உப்பு, மஞ்சள் தூள், சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். அதனுடன் கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • வதக்கியவற்றை எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் போட்டு தாளிக்கவும்.
  • அதில் அரைத்த விழுதை ஊற்றி கொதிக்க விடவும். அதனுடனேயே பனீரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  • அதனுடனேயே பனீரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  • பனீர் நன்கு வேக, கடாயை தட்டை வைத்து மூடி கொதிக்க விடவும்.
  • இப்பொழுது வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் காய்களை சேர்த்து மீண்டும் நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.
  • சுவையான ஆரோக்கியம் நிறைந்த பனீர் மின்ட் கறி ரெடி.

ஆலு கோபி ப்ரை(Alu Gopi Fry)

  • ஆலு (உருளை) - இரண்டு
  • கோபி (காலிஃப்ளவர்) - சிறிய பூ ஒன்று
  • தாளிக்க‌:
  • எண்ணெய் - 4 தேக்கரண்டி
  • க‌டுகு ‍ - அரை தேக்க‌ர‌ண்டி
  • உளுத்த‌ம்ப‌ருப்பு - ஒரு தேக்க‌ர‌ண்டி
  • காய்ந்த‌ மிள‌காய் - மூன்று
  • க‌றிவேப்பிலை - சிறிது
  • காஷ்மீரி சில்லி பொடி - ஒரு தேக்க‌ர‌ண்டி
  • ம‌ஞ்ச‌ள் தூள் - கால் தேக்க‌ர‌ண்டி
  • உப்பு - தேவைக்கு
  • பூண்டு பொடி(அ) பெருங்காயப்பொடி
  • காலிஃப்ளவ‌ரை பெரிய‌ பூக்க‌ளாக‌ பிரித்தெடுக்க‌வும். உருளையையும் பெரிய‌ துண்டுக‌ளாக‌ ந‌றுக்க‌வும், ஒரு ச‌ட்டியில் வெந்நீரை கொதிக்க‌ வைத்து கொஞ்ச‌மாக‌ உப்பு சேர்த்து காலிஃப்ளவ‌ரையும், உருளையையும் அதில் போட்டு ப‌த்து நிமிட‌ம் ஊற‌வைத்து வெந்நீரை வ‌டித்துவிட‌வும்.
  • ஒரு பெரிய‌ வாணலியை காய‌வைத்து அதில் எண்ணெய், க‌டுகு, உளுத்தம்ப‌ருப்பு, காய்ந்த ‌மிள‌காய், க‌றிவேப்பிலை சேர்த்து தாளிக்க‌வும்.
  • வ‌டித்து வைத்த‌ காலிஃப்ளவ‌ர் ம‌ற்றும் உருளையை சேர்த்து ந‌ன்கு கிளற‌வும்.
  • மீண்டும் கிள‌றி மூடி போட்டு தீயின் அளவை குறைத்து வைத்து ஐந்து நிமிட‌ம் வேக‌விட‌வும்.
  • பிற‌கு மிள‌காய் தூள், ம‌ஞ்ச‌ள் தூள், உப்பு தூள் சேர்த்து (பெருங்காய‌ பொடி (அ) பூண்டு பொடி ஒரு சிட்டிகை தூவி மீண்டும் ஐந்து நிமிட‌ம் வேக‌ விட‌வும்.
  • க‌டைசியாக‌ தீயின் அள‌வை அதிக‌ப்ப‌டுத்தி மொறுக‌லாக‌ வ‌றுத்து அடுப்பை அணைக்க‌வும்.
  • சுவையான‌ கார‌சார‌மான‌ ஆலு கோபி ரெடி.

சென்னா தால் வடை(Chenna Dal Vada)

  • வெள்ளை சென்னா(கொண்டைக்கடலை) - 200 கிராம்
  • காய்ந்த மிளகாய் - மூன்று
  • பட்டை ‍ - ஒரு அங்குலம் சைஸ்
  • சோம்பு - ஒரு தேக்கரண்டி
  • இட்லி சோடா - ஒரு பின்ச்
  • உப்பு - தேவைக்கு
  • பூண்டு - இர‌ண்டு ப‌ல்
  • சின்ன வெங்காயம் - எட்டு
  • பச்சை மிளகாய் - ஒன்று
  • துருவிய‌ இஞ்சி - ஒரு தேக்க‌ர‌ண்டி
  • க‌றிவேப்பிலை - சிறிது
  • கொத்தம‌ல்லி - சிறிது
  • வெள்ளை சென்னாவை எட்டு ம‌ணி நேர‌ம் ஊற‌ வைக்க‌வும்.
  • ஊறவைத்த சென்னாவை நன்கு க‌ளைந்து த‌ண்ணீரை வ‌டித்து வைக்க‌வும்.
  • முத‌லில் சோம்பு, காய்ந்த மிள‌காய், ப‌ட்டையை திரித்து கொண்டு சென்னாவை கொஞ்சமாக‌ போட்டு பூண்டு சேர்த்து நன்கு அரைக்க‌வும்.
  • மீதியை போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
  • வெங்காய‌ம், ப‌ச்சைமிள‌காய், கொத்தம‌ல்லி, க‌றிவேப்பிலை, துருவிய‌ இஞ்சி, உப்பு, சிறிது இட்லி சோடா க‌ல‌ந்து அரைத்த‌ க‌ல‌வையுட‌ன் ந‌ன்கு க‌ல‌க்க‌வும்.
  • வ‌டைக‌ளாக‌ சுட்டெடுக்க‌வும்

தக்காளி இஞ்சி சட்னி (Tomatoe Ginger Chutney)

  • அரைக்க‌:
  • நன்கு பழுத்த தக்காளி - நான்கு
  • இஞ்சி - ஒரு அங்குல துண்டு
  • காய்ந்த மிளகாய் - ஒன்று
  • தேங்காய் துருவல் - ஒரு மேசைக்கரண்டி
  • உப்பு - சிறிது
  • தாளிக்க‌:
  • எண்ணெய் - அரை தேக்கரண்டி
  • கடுகு - கால் தேக்கரண்டி
  • பெருங்காயம் - ஒரு பின்ச்
  • த‌க்காளியை பொடியாக‌ நறுக்கவும். இஞ்சியை தோல் நீக்கி பொடியாக‌ நறுக்கி அத்துட‌ன் த‌க்காளி, உப்பு, காய்ந்த மிள‌காய், தேங்காய் துருவல் சேர்த்து ந‌ன்கு அரைக்க‌வும்.
  • தாளிக்க‌ கொடுத்துள்ள‌வைக‌ளை தாளித்து சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
  • சுவையான‌ த‌க்காளி இஞ்சி ச‌ட்னி ரெடி