தேவையான பொருட்கள்- கொத்தமல்லிகீரை -1கட்டு
- சின்னவெங்காயம் -10
- தனியா -1ஸ்பூன்
- சீரகம் -1/4ஸ்பூன்
- காய்ந்தமிளகாய் -1
- பூண்டு -2பல்
- இஞ்சி -1சிறுதுண்டு
- தேங்காய் துறுவல் -1/4கப்
- பொட்டுகடலை -1ஸ்பூன்
- புளி -சிறிது
- உப்பு -தேவையான அளவு
- எண்ணை -1ஸ்பூன்
|
செய்முறை- கொத்தமல்லிகீரையை சுத்தம்செய்து அலசி வைக்கவும்.
- வெங்காயம்,பூண்டு தோல் உரித்துவைக்கவும்.
- இஞ்சியை சுத்தம் செய்து வைக்கவும்.
- வாணலியில் எண்ணை ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கி தனியா,சீரகம்,பூண்டு,இஞ்சி,காய்ந்தமிளகாய் போட்டு நன்குவதக்கவும்.
- கொத்தமல்லி கீரை போட்டு நன்கு சுருள வதக்கவும்.தேங்காய் துறுவல்,பொட்டுகடலை,புளி,உப்பு போட்டு வதக்கி ஆறவைக்கவும்.
- ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
- சுவையான கொத்தமல்லி சட்னி ரெடி.
|
குறிப்பு:
சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.இட்லி,தோசைக்கும் நன்றாக இருக்கும்.காரம் வேண்டுமென்றால் மிளகாய் அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம்
No comments:
Post a Comment