செய்முறை- கத்தரிக்காயை நறுக்கிக் கொண்டு 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு வதக்கி தனியே வைத்துக் கொள்ளவும்.
- பிறகு 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பை பொன்னிறமாகும் வரை வறுக்கவும். அடுத்து பெருங்காயத்தை நன்கு பொரித்துக் கொண்டு, அடுப்பை அணைத்துவிட்டு, அந்த வாணலியின் சூட்டிலேயே காய்ந்த மிளகாயைப் போட்டு வறுக்கவும்.
- சூடு ஆறிய பின் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு சுண்டைக்காய் அளவு புளி மற்றும் உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். நீர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை.
- இதை சாதத்திற்குப் பிசைந்து சாப்பிடவும், தயிர் சாதம், மற்றும் தோசை இட்லி என அனைத்திற்கும் தொட்டுக் கொள்ள மிக அருமையாக இருக்கும்
|
No comments:
Post a Comment